தலைப்பிடவில்லை

கனவில் தெரியும்
காதலின் யாகம்
இரவின் உரசல்
இளமை மோகம்...!

மின்னல் குடையில்
மின்மினிப் பூச்சியாய்
விண்மீன் மழையில்
நனையாதிருப்போம்...!

மகரந்த இசையில்
மலரின் கானம்
பூவின் காதில்
புதிர் பேசும் வண்டு...!

இளமையின் வேகம்
ஈட்டியின் நுனி
மனதின் வக்கிரம்
நாட்பட்ட குப்பை...!

எழுதியவர் : சகா (சலீம் கான்) (16-Jun-15, 9:49 pm)
பார்வை : 132

மேலே