இறந்த காதலனுக்கு
![](https://eluthu.com/images/loading.gif)
இறந்த காதலனுக்கு. . .
உன் இறந்த கால காதலி எழுதுகிறேன். .
கவிதை எழுதி பல நாட்கள்
கடந்து விட்டது தலைவா. .!
உன் முகம் தேடி
மூடிய விழி இருட்டில்
குடைந்து குடைந்து செதுக்கிய
கலையான தேக சுவடுகள்
இன்னும் மங்களாக. . .
நாம் சென்ற
தார் ரோடும்
தாமரை குலமும் அப்படியே. . .
அப்படியே அங்கேயே
எனக்காக நீ காத்திருந்தால்
வேரென்ன வேண்டியிருப்பேன். .?
கால் கடுக்க காத்திருந்து
கோபமாய் சென்றுவிட்டாய் நீ
கல்லூரி வாசலில்
குருடி போல் உனை தேடுகிறேன் நான்
காத்திருந்த நேரம் போக
உன் கல்லரை திசை காட்டியிருந்தால்
கண்மணி சிவக்க இன்று
கலங்கி இருக்க மாட்டேன். .
கடைசியாய் உன் முகம் பார்க்க
கொடுப்பினை இல்லா காதலி
காதலை கொட்ட வழி தேடி
கவிதையாய் வடிக்கிறேன்
உன் சாம்பல் கறைந்த நதி வழியே
பறக்க விடுகிறேன்
இக்கவியின் காகிதங்களை. .