செயல்கள் சிறப்பெனில் விளக்கங்கள் தேவையில்லை

இது ஒரு மொழி பெயர்ப்புக் கட்டுரை ... படித்ததில் பிடித்தது மொழி பெயர்த்துப் பகிர்ந்துள்ளேன்.... நன்றி

Note:1 This is a translation from one chapter of the book "Unposted letter" by Shri TT Ranga Rajan. Rajan, who is affectionately referred to as the 'Voice of Love', is a spiritualist, endowed with a deep connectivity to existence. He guides people in their quest for self-realisation..

Note 2: There may be some omissions while translating the writing of the original author....
======================================================================

சிறப்பான செயல்கள் தானாக விளங்கும் தன்மையுடையது. எங்கே சிறப்பு உண்டோ அங்கே விளக்கங்கள் தேவை இல்லை. எங்கே விளக்கங்கள் தேவைப் படுகிறதோ அங்கே சிறப்பை காண்பது அரிது.

எது 'சரியோ' அது 'சரி'. எது சரி இல்லையோ அது சரி அல்ல. ஆனால் 'சரி' அல்லாததை 'சரி' என்று நியாப் படுத்தவும், விளக்கவும், நம்ப வைக்கவும் முயற்சிக்கும் பழக்கம் நமக்கு உண்டு. இதை நிறுத்துங்கள்..! எப்பொழுது நாம் சரி இல்லாததை சரி என்று நம் மனதால் நியாயப்படுத்துதலைப் பழக்குகிறோமோ அப்போழுதே நம்மை நாமே அழிக்கத் தொடங்குகிறோம். சிறப்பு அல்லாததை நியாயப் படுத்தப் பழகத் தொடங்கினால் அவற்றை ஏற்றுக் கொள்ள மனம் தயாராகி விடும்.

நீங்கள் 100-க்கு 88 மதிப்பெண் பெற்றிருந்தால் - உண்மை என்னவென்றால் நீங்கள் 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றிருக்கிறீர்கள்.. நீங்கள் என்ன விளக்கம் தந்தாலும் நீங்கள் அப்போழுதும் 12 மதிப்பெண் குறைவாகத்தான் இருப்பீர்கள். வார்தைகளால் அந்தப் 12-ஐ நிவர்த்தி செய்ய்ய முடியாது... நீங்கள் 88-ஐ, 88-தான் என்று தெரிந்தும் 88-ஐ 100 என்று நியாயப் படுத்த முயல்கிறீர்கள்..

ஒரு பழமோழி உண்டு. "ஒரு பொய்யை ஆயிரம் முறை கூறினால் உண்மை ஆகும் என்று". மற்றவர்களுக்கு அது உண்மை போல் தோன்றலாம் ஆனால் உங்கள் மனதுக்கு எப்போழுதும் தெரியும் அது பொய்யென்று. எவ்வளவு நாள் பூனையை சிங்கமென காட்ட முடியும்... உங்களிடமிருந்து உண்மையை மறைக்க முடியாது. உண்மையிடமிருந்தும் நீங்கள் ஒளிந்து கொள்ள முடியாது. எந்த விளக்கங்களும் உங்கள் குறையை நிறை செய்யாது..

உங்கள் வியாபர இலக்கு 40 லட்சத்திற்குப் பதிலாக நீங்கள் 36 லட்சம்தான் எட்டியிருந்தீர்கள் என்றால் நீங்கள் இலக்கைவிட குறைவாக எடுத்துள்ளீர்கள். நீங்கள் 11.00 மணிககு ஒரிடத்திற்கு செல்வதற்குப் பதிலாக 11.15 சென்றீர்கள் என்றால் நீங்கள் தாமதமாகச் சென்றிருக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவதுதான் விளக்கினாலும் நீங்கள் இலக்கை அடைய வில்லை என்பதும், நேரம் தவராமையைக் கடைபிடிக்க வில்லை என்பதுமே உண்மை.

சிறப்பின்மைக்கு உங்களையே நீங்கள் சமரசப் படுத்திக் கொள்வது உங்கள் வாழ்க்கையை பெரிதாகப் பாதிக்கும். அடிக்கடி நீங்கள் இலக்கை தவறவும், இறுதியில் உங்கள் முழுத் திறமையை அடையாமலும் போவீர்கள். விழித்துக் கொள்ளுங்கள்... எது 'சரி' இல்லையோ அது 'சரி' அல்ல. 6.01 மணி - 6.00 மணி அல்ல.. எது எதுவோ... அது அதுதான்...

'பூஜியத் தவறு' (zero defect) சாத்தியமே.
துல்லியச் செயல்பாடு சாத்தியமே.
தொடர் சிறப்புச் செயல்பாடும் சாத்தியமே.

சிறப்பு குறைவாக உள்ள எதையும் ஏற்றுக் கொள்ள மறுப்பதே இதன் துவக்கமாகும். வாழ்க்கையில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் நீங்கள் சிறப்பு அற்றதை மறுத்தால், உங்களுக்கு சிறந்ததையே கொடுக்கும்.

சிறப்பின்மை மனதில் வலியை ஏற்ப்படுத்த வேண்டும்.
எது வலி ஏற்படுத்துகிறதோ அது கற்றுத் தரும்.
எது கற்றுத் தருகிற்தோ அது உருவாக்கிறது
உருவாக்குங்கள்....! சிறப்பானவற்றை உருவாக்குங்கள்!
உங்கள் செயல்கள் உங்களுக்காக பேசட்டும்..
நீங்கள் அதற்காக பேச வேண்டாம்.

******

எழுதியவர் : முரளி (17-Jun-15, 12:52 pm)
பார்வை : 254

மேலே