கடவுளை தேடி
கைலாயமலை கால்நடையாய்
போனேன் ....
கடவுளை காண ...
கடும் அமைதி இருந்தது
கடவுளை காணோம் ...
சிலுவையை என்மீது
தூக்கிலிட்டு ,
புதுபெயரிட்டு
ஆண்டவரை காண
ஆலயம் போனேன் ...
ஆழ்ந்த அமைதி ஆற்கொண்டது
ஆண்டவரை காணோம் ...
தலைமீது குல்லாய் கவிழ்த்து
இறைவனை பார்க்க
இன்னொரு பெயர்மாற்றி
பள்ளிவாசல் (மசூதி )
பயணமானேன் ...
இனிமையான அமைதி
அமைதியாக இருந்தது
இறைவனை காணோம் ....
எங்கும் காணோம்
கடவுளை ...
அலைந்த இடமெல்லாம்
அமைதியாக இருக்க
எங்கும் அலையாமல்
அமைதி கொண்டு
என்னுள்ளே
போனேன் ...
அழகு கடவுள்
என் கடவுக்குள்
இருந்தார் ...