உங்களுக்கும் தெரியும்தான்

சுவரில் மாட்டப் பட்டிருக்கிறது
வாழ்வின் சிலுவையில் அறையப்பட்டிருந்த ஓவியம்.
எல்லாத் திசைகளிலும் மண்டியிட்டிருக்கிறது
ஓவியத்தின் நிழல்.
ஓயாது நிகழ்ந்த ஓவியத்தின் நடனங்கள்
திரைச் சீலைகளாய் படபடத்துக் கிடக்கின்றன.
அதன் பாடல்கள் ....
புல்லாங்குழலினூடாய் வெளியேறி ஓய்ந்திருந்தது.
காற்றில் திரியும் அதன் முத்தங்கள்
வீட்டின் கன்னங்களை வருடிக் கொண்டிருக்கின்றன.
அதன் ருசி ஊறிய கனவில் உள்புகுந்து விரிகிறது
அது இனி நிரப்ப இயலாத காலம்.
இந்த அறைக்கு வெளியே அலையும்
அதன் உறக்கமற்ற உறக்கத்தில்
என்னைக் கேலி செய்தபடி நடந்து போகிறது...
உங்களுக்கும் விடை தெரிந்த ஒரு புதிர்.

எழுதியவர் : rameshalam (17-Jun-15, 6:57 pm)
பார்வை : 61

மேலே