தயக்கத்தின் கவிதை

தயக்கத்தின் முட்டையாய்
எனக்குள் இருந்தது இந்தக் கவிதை.
முற்றாத கர்ப்பத்தின் வலியாய்
எனது உடலெங்கும் நடந்து பரவியது இந்தக் கவிதை.
வெப்ப அலையாய்...
உடல் நடுக்கமுற தீயில் குளிர்ந்தது வெம்மை.
வார்த்தைகள் பரிவாரமாக
எனக்குள் தொடங்கியது போர்.
எரிமலையின் வார்த்தைகள்...
எனக்குள் ரணமாகி
துயரத்தின் ஒலியோடு பயணிக்கிறது.
காட்சியின் பரிமாணங்கள் தப்ப..
பெரு மழையின் ஈரத்தில் சரிந்த மணலென
ஒலியற்ற ஓசையாய்க் குழைந்து போய் இருந்தது

எனதிந்தக் கவிதை.

எழுதியவர் : rameshalam (17-Jun-15, 7:27 pm)
பார்வை : 83

மேலே