மோட்டுவளைச் சிந்தனைகள் - 3
தெருவுக்குப் புதிதாக
வந்திருந்த
ஒரு பெண் நாயைப்
பார்த்துப் பல்லிளித்தபடி
பெப்பரப்பே
என நின்றிருந்த
சக தெருநாயை
குப்பைத்தொட்டியில்
போடப்பட்ட
பாதி
லெக் பீசுடன் கூடிய
பிரியாணிக் கவரை
மோப்பம் பிடித்துவிட்ட
இன்னொரு
சக தெருநாய்
" ஏ மனுஷா,
குறுக்கே நிக்காதே
அந்தப் பக்கம்
போய் ஒழி "
என்றது
அதன் மொழியில்