மோட்டுவளைச் சிந்தனைகள் - 4

இன்று ஏதாவது
சிந்தனை வாராதா
என்று
மோட்டுவளையையே
உற்று உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
ஏய்
இங்கே என்ன
வாழுகிறது ?
ஏன் இப்படி
உற்று உற்றுப் பார்த்து
உயிரை வாங்குகிறாய்
என்றது
மோட்டுவளை

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (18-Jun-15, 11:18 am)
பார்வை : 145

மேலே