காதல் விதிகளே

உருக்குலைந்த இதயங்கள்
வலிகளின் பாதங்களில்
உணர்வுகள் உதிர்ந்த
பாய்களாய்

சொல்ல மறந்த மறைந்த
கதைகளில் ஒழுகிக் கொண்-
டிருக்கும் காதல் திரவங்கள்
என்றும் நீங்கா நினைவுகள்

மனங்கள் மணந்த உணர்ச்சிகள்
வறட்சியான பொழுதுகளில்
வசந்தக் காலம் கூட
காரிருள் கலந்த இருளே

கொடுமைகள் தொடுத்த பாயலில்
இனிமைகள் கரையும் பஞ்சுகள்
தொண்டையைக் கடக்கும் கற்கண்டும்
மாறிப் போகும் நஞ்சுக்கள்

சிலந்தி வலையில் சிக்கிய
வண்டு தான் நானும் '
திசைகள் மறைத்த இசைகளே
உன் குரல்கள் கொடுத்த ஓசை

மௌனங்கள் காதல் மொழி-
யென்றால் கண்ணருவிகளும்
செங்குத்தான பேசும் நதிகளே
இவைகளும் விவரம் சொல்லும்
விலாசத்தின் காதல் விதிகளே ...

எழுதியவர் : குறிஞ்சிவேலன் தமிழகரன் (17-Jun-15, 10:29 pm)
பார்வை : 686

மேலே