பொடிநடையா போறவளே

ஆண்: காவேரி கரைமேலே
---------கால்நடையா போறவளே
---------காவலுக்கு நானும் வரேன்
---------கண்ணேகொஞ்சம் நில்லடியோ

பெண்: கரிகாலன் பொறந்த மண்ணில்
----------கண்ணகிக்கும் வீரம் உண்டு
----------கருப்பசாமி தொணை இருக்க
----------காவலுக்கு நீ எதுக்கு?

ஆண்: பொழுது சாஞ்சிடுச்சி
---------பொதிகமல மறஞ்சிடுச்சி
---------பொல்லாத நேரத்துல
---------பொண்ணே நீ போகலாமோ?

பெண்: பொழப்பத்த புண்ணாக்கு
----------பொல்லாங்கு பேசாத
----------அச்சம் எனக்கு இல்ல
----------ஆள்த்தொணையும் தேவயில்ல

ஆண்: பெண்புத்தி பின்புத்தி
---------பெரியவங்க சொன்னதெல்லாம்
---------மறந்து தொலச்சிபுட்டு
---------மனசுகெட்டுப் போகலாமோ?

பெண்: அடிம நானுமில்ல
----------ஆம்பளைக்கி பின்னுமில்ல
----------வம்பு பண்ணவேணாம்
----------வாய்மூடி போயிடுங்க

ஆண்: திமிரு புடிச்சவளே
---------தெனாவட்டு படிச்சவளே
---------பொல்லாத சிறுக்கி நீ
---------போய் தொலஞ்சிபோடி

பெண்: நாவ அடக்கிப்பேசு
----------நயவஞ்சம் கொண்டவனே
---------ஆடு நனையுதுன்னு
---------ஓநாயிக்கி கவல வேணாம்.


-----நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன், தச்சூர். (17-Jun-15, 9:46 pm)
பார்வை : 300

மேலே