தினமும்
மீட்டர் மீட்டராய்
துணிக்கடைகளிலும்
கிலோ கிலோவாய்
மளிகை கடைகளிலும்
கோப்பை கோப்பையாய்
தேநீர் கடைகளிலும்
மூட்டை மூட்டையாய்
நிமிரும் கட்டிடங்களிலும்
மில்லி மில்லியாய்
மதுக்கடைகளிலும்
பக்கம் பக்கமாய்
அச்சகங்களிலும்
குச்சி குச்சியாய்
தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும்
சிதைந்துக் கொண்டிருக்கலாம்
இந்தியாவின் கனவுகள்.
--கனா காண்பவன்