ஐந்தாவது வேதம் - கவிதையின் வடிவம் - 12274

வானத்தில் கடை போடு
வண்ணத்தை எடை போடு
வாடிக்கையாளர் தென்றலடா
வரும் லாபம் கவிதையடா....!!

கிறுக்கன் என மனிதம் சொல்லும்
கிள்ளி எரி வார்த்தை கொல்லும்
கீதை என உன் கவியே வெல்லும் - மற்ற
கிரகங்களையும் அது ஆட்சி செய்யும்...!!

பிரம்மனுக்கும் சொல்லிக் கொடு
பிரிவினை வாதம் கவி உலகில் இல்லை
பிள்ளை என அனைத்து கவிஞர்களும்
பின்னேறி மகிழும் திறன் அறிவர்......!!

முக்காலமும் கவிஞன் அறிவான்
முன்னேற்றத்தையும் அவன் கணிப்பான்
முடிவு என்பது அவன் தேகத்துக்கு
முடிவே இல்லை அவன் கவிதைக்கு...!!

எழுதியவர் : ஹரி (17-Jun-15, 11:14 pm)
பார்வை : 76

மேலே