விழி எதிரே ஓவியங்கள் - விரிகின்ற பூ மலர்கள் - 12275

உடற்பயிற்சி கூடமாய்
ஊர் எல்லைக் குளம் - அதில்
சிரசாசனம் செய்யுது
சிங்காரமாய் பூமரம்.....!!

கற்பனை வலையில் சிக்குது
காட்சிகள் எனும் வண்ண மீன்கள்
கரி சமைக்கப் போகிறேன் - அதற்கு
கவிதை என்று பெயர் வைத்து...!!

எழுதியவர் : ஹரி (17-Jun-15, 11:24 pm)
பார்வை : 134

மேலே