உன் அழகு
கவிதை எழுதிய நான்
உன் காதலன் ...
அதை ரசித்த நீ
என் காதலி .......என்றால்
காதலை இப்போது - நீ
அழிக்க நினைக்கிறாய் .......
கேட்டால் - நான்
நான் கவிதைக்குத்தான்
காதலி என்கிறாய்!
பரவாயில்லை
நாட்கள் சென்றவுடன்
என்னை அழித்தது போல்
என்
கவிதையையும் அழித்துவிடாதே.....
அவைதான் உன்னை அழகுபடுத்தியவை!
என்றும் அன்புடன்
அ.மணிமுருகன்