அழகான கனா

உந்தன் மீசை என்ன குயிலின்
சிறகுகளா?
எந்தன் சுவாசம் பட்டதும்
சிறகு விரித்து  படபடக்கிறதே..

உந்தன் ரோஜா கன்னம் என்ன 
கருத்த  ரோஜா முட்களா?
எந்தன் கன்னம் தொடாமல் சிணுங்கியது
தொட்டாற் சிணுங்கி போல்....

உந்தன் தோளில் சாய்ந்து கொள்கிறேன் மெதுவாய்
அதைக் கண்டு இலவு கிளிபோல்
பஞ்சணை முறைக்கிறதே. ...

உந்தன் விரல்களைப் பற்றிக் கொள்கிறேன் கொடியில் பூத்த
மலர்கள் என்னிடம் கோபித்துக் கொள்கிறதே..

வெள்ளிக் கம்பிகள்
குத்துகிறதே மணிக்கணக்கில்
இன்று

சமைத்துப் பார்க்கிறேன்
சமைக்கப் பார்க்கிறாய்
சமைந்து பார்க்கிறேன்
ரசிக்கத் தெரியாமலே...

ஆஹா!
அழகான கனா !
அழகானது அந்த
அழகான தருணங்களில்...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (18-Jun-15, 3:59 pm)
Tanglish : azhagana kanaa
பார்வை : 280

மேலே