தோல்வியும் நன்று

தோல்வியே காணாது வெற்றிப்பெற்றோர்
இரவை
காணாத சூரியனை
பரிசாகப்
பெற்றவர்கள்
அவர்களுக்கு
நிலவெனும் அனுபவம்
கிடைப்பதில்லை
தோல்வி காணாது
வெற்றிப்பெற்றோர்
இனிப்பெனும்
மகிழ்ச்சியை
மட்டும்
சுவைத்தவர்கள்
அவர்கள்
கசப்பெனும்
மருந்தினை அறிவதில்லை
தோல்வி காணாது வெற்றிப்பெற்றோர்
வெற்றி தோல்வி
சரிபாதி கொண்ட
பூமியில்
வெற்றிப்பாதையை(பாதியை)
மட்டும் சுற்றி
வந்தவர்கள்..
அவர்களுக்கு
பூமி முழுபந்து
அல்ல அரைபந்தே
அதை
கையில்
வைத்துக்கொள்ள
முடியுமே தவிர
விளையாட இயலாது..
தோல்வி காணாது வெற்றிப்பெற்றோர்
தோல்வி
படகிற்கு
கலங்கரைவிளக்கமாகலாம்!
ஆனால்
கடலின்
அழகையோ
ஆழத்தையோ ரசிக்க இயலாது..
தோல்வி காணாது வெற்றிப்பெற்றோர்
கோயில்
கலசமாய்
விண்ணை ரசிக்கலாம்..?
தோல்வித்
தூண்கள்
தூக்கிவிடும் பட்சத்தில்..