எந்த நிலையிலும் கவிக்கு மரணமில்லை - 12281

காலையில் வண்ணங்கள் எழில் வடிவம் - அதைப் பல
கண்கள் காணாது இமை மூடும்
காசின் வண்ணமோ ஒரே வடிவம் - எனினும் மானுடக்
கண்கள் வியந்து இமை திறக்கும்.....!
மனித இயல்பிது மாறாது - அது கவி
மனசின் பசியை அறியாது
மாண்டவர் என்பவர் தேகத்தை தொலைத்தவர்
மாள்பவர் அழியும் தேகத்துக்காய் வாழ்பவர்....!!