பசுமை

மலைகலோடு கூடி நின்று
மலர் சோலையாக அழகு அருள்வாள்!
காய்ந்துபோன உலகை வந்து
மாரி கொண்டு குளிர வைப்பாள்!
மூச்சுவிடும் பிராணவாயுவை
மூச்சுவிடாமல் உழைத்து தருவாள்!
காய்கள் என்றும் கனிகள் என்றும்
காலமெல்லாம் சுவை கொடுப்பாள்!
பூவாய் மலராய் மாலையிட
பூலோகம் மணக்க செய்வாள்!
சேய்களோடு கூடினின்று
தேசமிதை குளிர செய்வாள்!
சுட்டுவரும் வெய்யிலிலிருந்து
சுகம் காண நிழலை தருவாள்!
தன்னலமில்லா தாயுள்ளமாய்
மூலிகையாய் நம் நலம் காப்பாள்!

நம் உயிரோடு உயிராய் கலந்த
இயற்கை தாயவள், நம் பசுமை மரம்!!!

நன்றியோடு மரம் நடுவோம் ...
உயிர் காப்போம்!! உலகை காப்போம்!!!

பிரியமுடன்
அசுபா....

எழுதியவர் : அசுபா (19-Jun-15, 7:19 pm)
Tanglish : pasumai
பார்வை : 151

மேலே