இறைநம்பிக்கை

இருண்ட குகையுள் குருடனின் பயணம்!
மருண்ட என் பார்வையில் வாழ்வின் மெய்மை!
உருண்ட நவகோள்களின் பயனோ? நல்வினையோ?
சுருண்ட என்மனதுள் ஆன்மிகஒளி!

இறைநம்பிக்கை அவ்வொளியில் பொங்கி எழ,
மறைவழியில் மனம் அதனை நித்தம் தொழ,
குறையொன்றுமில்லையென உள்ளம் பரவசத்தில் விழ,
கறைநீங்கிய மனது கரைந்துருகி அழும்!

புறஉலகின் அழகினில் கண்டேன் இறை பிம்பம்!
பிறஉயிர்கள் வடிவினில் கண்டேன் இறை உருவம்!
உள்ளிருப்பது இறை என்றானபின் சந்தேகத்திறகு ஏது இடம்!
வெள்ளைப்பாலினுள் நெய் என்றால் சந்தேகிக்குமோ மனிதகுலம்!

சுடர்விடும் அவ்வொளியே இடர்தாங்கும் திடம் தரும்!
மடமை நீக்கி, தன்னைத் தான் உணரும் பேரின்பம் தரும்!
நான் அழிந்து வாழ்வில் இறைநம்பிக்கையுடன் பயணிப்பேன்!
ஆன்மஒளி துணைகொண்டு அமைதியுடன் மரணிப்பேன்!

எழுதியவர் : (19-Jun-15, 8:02 pm)
பார்வை : 134

மேலே