பாப்பாவுக்கு-1-ரகு
சின்னச் சின்ன பாப்பாவே
செல்ல மானப் பாப்பாவே
வண்ண வண்ணக் கனவுகளை
வளர்த்துக் கொள்ளு பாப்பாவே !
மழலை மொழி பேசிப்பேசி
மகிழ் விக்கும் பாப்பாவே
கவலை இன்றி வாழக்
கற்றுக் கொள்ளு பாப்பாவே !
கொஞ்சிக் கொஞ்சி விளையாடிக்
குதூ களிக்கும் பாப்பாவே
அஞ்சி அஞ்சி வாழ்வதிலே
அர்த்த மில்லை பாப்பாவே
குதித்துக் குதித்து ஓடியாடிக்
கொள்ளை கொள்ளும் பாப்பாவே
மதித்துப் பேசிப் பழகவேணும்
மறந் திடாதே பாப்பாவே !
மென்மையான மலரைப் போல்
மனங் கொண்டாய்ப் பாப்பாவே
வன்மையான செயல் களுக்கு
வழி விடாதே பாப்பாவே !
குட்டு வாங்கிக் கற்றாலும்
கோபிக் காதே பாப்பாவே
எட்டுத் திக்குமுன் புகழை
எடுத்துச் செல்லும் பாப்பாவே !
-தொடரும்-