சாலைகள்
கனவுகளின் வழிதடம் சாலைகள்!♦
மனிதர் மனங்கள் கனவு
நிறைந்த அறைகள் - அது
வெளிவரவே வழிகளில் இருக்கு
சில விதிமுறைகள்!
♦
வளைந்து போகும் சாலைகள்
உன்னை குழப்பத்தில் ஆட்டும்!
நடுவில் உள்ள மேடுபள்ளம் உனது
கனவுகளின் தடைகற்கள்.
அது பயத்தினை மூட்டும்!
♦
அதிக வேகம் கொண்டால் உனது
கனவுகள் சிதைந்துவிடும்.
மனித மூளை பொறுமை பார்த்தால்
வெற்றி பாதையை காட்டிடும்!
♦
எத்தனையே மனிதர்கள்,
ஏதேதோ கனவுகளோடு,
நடக்கின்றார் சாலைகளில்!
விதியென்னும் விளையாட்டால்
ஏதும் நடக்கவில்லை-இருந்தும்
மனிதர் மட்டும் நடக்கின்றார்
இன்னும் சாலைகளில்!!
♦
பாதங்கள் பல தாங்கி,
பயணங்கள் பல நீண்டு - இன்னும்
வாழ்கிறது சாலைகள்.
அது, இன்பம் எனும் மொழி கேட்டு
தலை துண்டித்து கிடக்கும்
மனிதர்களின் முகம் பார்த்து
துயரங்களை தாங்கி
கண்ணீர் வடிக்கிறது!!
♦
அதற்கு ,ஏதேனும் உதவி
செய்ய முன் வந்தால் - சில
மரங்களை நடுங்கள். அதாவது
அதற்கு சில நிழல்கள் தரும்!!!
♦
கடவுளை வேண்டிக் கொள்வோம்!
சாலைகள்
கோபம் கொள்ளாமல்,
பிளந்து விடாமல்,
அமைதியாய் வாழ,
எங்கள் உயிர் காக்க,
வேண்டிக் கொள்வோம்!!!