கூழாங்கற்களின் மௌனம்

எனை குறித்து,
என்னை தவிர
எல்லோரும் கவலை கொள்கிறார்கள்..
என்னை அறிந்ததை தவிர
அவர்கள் செய்த குற்றம் வேறொன்றுமில்லை
இதற்கு மாறாக,
என்னை போலவே,
அவர்களும்
என்னை அறியாது இருந்திருக்கலாம்..
*
காலமாகும்போது புரிகிறது
காலத்திடம் கருணை எதிர்பார்த்தது
முட்டாள்தனமென்று..!
*
இமை மூடினால் இரவுதான்;
இதற்கு ஏன்
இவ்வளவு தூரம் சுற்றவேண்டும் இப்பூமி..?!!

எழுதியவர் : கல்கிஷ் (20-Jun-15, 12:44 pm)
பார்வை : 97

மேலே