அகதிகளின் கதறல்
சூன் 20 - உலக அகதிகள் தினம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாடிருக்கு வீடிருக்கு
ஊரிருக்கு உறவிருக்கு
வக்கத்த எம்மக்களுக்கு
வாழ வழியில்லையே..
போரெனும் பேரழிவு
எங்கள் வாழ்வை சீரழித்தது..
வேறோடு பிடுங்கி
வீதியில் எறியப்பட்டோம்..
நாட்கள் பல பசி மறந்து
கண்ணீர் புசித்தோம்..
பயத்தை மட்டும் பயமின்றி
உடல் முழுக்க அப்பினோம்..
பதுங்கு குழிகளுக்குள்
குடி புகுந்து
உயிர் சேமித்தோம்..
அமைதி எனும் சொல்லை
உச்சரிக்க அரவே மறத்தோம்..
உறவுகளை மறந்தும், பிரிந்தும்
திசைக் கொன்றாய் சிதறினோம்..
தேசங்கள் பல கடந்தும்
இன்னும் பறவைகளாய்
பறந்து கொண்டே இருக்கிறோம்..
வேறூன நிலம் தேடி
அகதிகளாய்...