சிங்க முகக்காளி


"ஓம் ஸ்ரீ குருகுஹாய நமஹ"
சீர்புகழும் சிங்க முகக்காளியே
பார்முழுதும் என்சொல் பலித்திடவே
கார்போல அருளைப் பொழிந்து
தேர்உயர செல்வம் தருவாய் அகம்
அகத்திலிருந்து ஆளுகின்ற ஆத்தாளே
தவத்திலிருந்து உன்தாள் பணிகின்றேன்
மனத்திலிருந்து மங்கலங்கள் ஒருசேர
சிவத்திலிருந்து அருள்வாய் நலம்
நலங்கள் மிகவே எமைச்சேர
துன்மதி கொண்டோர் துடைத்தெறிந்து
நிம்மதி வாழ்வில் நிறைகூட்டி
அருள்வாய் சிங்க முகக்காளி
காளி உந்தன் பதம்பற்றி
மலர்கள் கோடி தினம்தூவி
பணிந்து மகிழ மனமிறங்கி
அருள்வாய் அம்மா சீர்புகழ
புகழும் பொருளும் உடன்சேர
பொங்கி வழியும் பாற்குடமாய்
பொற்தா மரையின் திருமகளாய்
கனகமழையை தினம் பொழிவாய்

எழுதியவர் : சின்ன செட்டியப்பன் (20-Jun-15, 11:29 am)
சேர்த்தது : KKdi Subramaniyan
பார்வை : 317

மேலே