வினாடிக்கவிதைகள் 4

விநாடிக்கவிதைகள் (4)
==================================================ருத்ரா


மணிபூரகம் கும்பகம் ரேசகம்
முஸ்லீம் இந்து கிருஸ்து
எல்லாம் இங்கு இணைவதே யோகா.

_______________________________________


யோகாவுக்கு நூறு கோடியில் விளம்பரம்!
காற்றையும் வியாபாரம் செய்ய‌
இங்கு கார்பரேட்டுகளா?

_________________________________________


தென்னாடுடைய சிவனே போற்றி என்ற
பதஞ்சலிகள் சூத்திரங்களின் மையம்
தமிழ் நாடு அல்லவா !
கூடுவாஞ்சேரி தானே இனி சாணக்கியபுரி.

__________________________________________


கனரக பீரங்கிகள் ரேடார் போர் விமானங்கள்
இத்யாத்தி இத்யாதி எல்லாம் இனி
கடலில் கொட்டப்படும்.
இது பகைமை இல்லாத பாரதம்.

_____________________________________________


யோகாவுக்கும் உலக தினம்!
வெள்ளைக்காரர்கள் உட்கார்ந்த மான் தோலிலும்
மானுடம் நசுக்கும்"கருப்பு வெள்ளை"ப்புள்ளிகள் .

_______________________________________________

மூக்கு "மாடல்களும்" மூச்சுக்காற்றும்
ப்ளாஸ்டிக் பைகளில் அடைத்து
கிராமம் தோறும் விற்பனை.
"பாரதிய ப்ராணாயாமா ஆந்தோலன்"

_________________________________________________


ஜனநாயக சுவாசம் தடை படலாமா?
வாக்கு வங்கிகள் குவிக்கிறோம் என்று
செல்கள் வழியே
கழுத்தை நெறிப்பதை நிறுத்துங்கள்.

___________________________________________________


நியூட்ரினாவுக்குள் குண்டலினியா?
குண்டலினிக்குள் நியூட்ரினோவா?
அதற்கும் ஆயிரம் கோடியில்
கோடிநாம அர்ச்சனையுடன் ருத்ர யாகம்!

___________________________________________________


முதுகெலும்பை முறுக்கி
ஆயிரம் இதழ் "தாமரையை"
மேலே எழுப்புவது இருக்கட்டும்
பெட்ரோல் விலை பிரம்ம ரகசியம் என்ன?

____________________________________________________

எழுதியவர் : ருத்ரா (20-Jun-15, 10:41 am)
பார்வை : 65

மேலே