கவிதைகள் தேசத்தைக் காப்பாற்றும்
கவிதையே உன்னை நான்
உலகத்தின் உயரத்தில் வைத்தேன்!
வள்ளுவன் சொன்னான்:
அதை பிடிப்பது
மிகவும் எளிமை!
கம்பன் சொன்னான்:
அதன் குறுக்கு வழி
தெரியும் எனக்கு!!
பாரதி சொன்னான்:
நீ வைத்த உயரம்
ஓர் நாள் நான் சென்ற
உயரம் தான்!!
கவிதையே,
உன்னை மனிதனை விட்டு
தள்ளியே வைத்தாலும் பிடிக்கவே
பார்க்கிறார்!!
இதனாலே இன்னும் நீ
சிறந்து விளங்குவாய்!!
கவிதைகள் ஒரு நாள்
தேசத்தை காப்பாற்றியே தீரும்!!!!!