தளிர்கள்

26
ஒட்டிய மண் சுட்டிக் காட்டும்படி செய்தது.

27
தீட்டப்படாத ஓவியம் சொன்னது “எனக்கு வண்ணங்கள் வேணு”மென்று.

28
நெடுஞ்சாலைக்கு வேலிச்சுவர் எதுக்கு?

29
கரை இல்லாத நதி பாய்ந்துக்கொண்டே இருக்கிறது.

30
கோலம் போட்டப்பின் கன மழை பெய்தது.

31
“துர்நாற்றம்” என்றவுடன், சமுதாயம் தன்னைத் தான் பார்த்துக் கொன்டது.

32
அனல் காற்று வீசுது,.. விஞானத்திற்கு வேறொரு முகமும் உள்ளது.

33
சத்தம் சங்கீதமல்லவே.

34
புத்தகங்கள் சரி வர படிக்கப் படுவதில்லை.

35
நிம்மதி கிடைத்தது., கனவு தொடர்கிறது….

36
திரையை விலக்க முடியவில்லை, காட்சிகளைப் பற்றிப் பேசுகிறார்கள்…


37
உண்மைக்கு கோயில் கட்டப்படுவதில்லை

38
பொய்மைக்கு வழி பாடுகள் நடக்கின்றன…


39
ஒலிக்கும் வரையில் தான் சங்கீதம்.

40
கவித்துவம் வாக்கியங்களிலா இருக்கும்?

41
வரையப்படும் ஓவியத்துக்கு காயமாகிறது.

42
முதுமை என்பது பகுப்பாய்வுக் காகத்தானோ?

43
எண்ணும் மனதுக்குத்தான் தன்மைகள் புரியும்.

44
தெரிந்த தெல்லாம் புரிந்து விடிவதில்லை

45
உணர்ந்தால்தான் உண்மை.

46
நடைமுறையில் இருப்பதால் மதிப்பு மிக்கதாகுமா?

47
எரிக்கக் கூடியது நெருப்பு மட்டுமல்ல.

48
காய்ச்சியப் பின் தானே நெய் கிடைக்கும்.
49
மொழி தொடுக்கப்படுகிறது… பற்றாக்குரை தீரவில்லை.

50
நெடுங்காலமாய் தொடர்கிறது… ஆபத்து நீங்காதோ?

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (20-Jun-15, 3:34 pm)
பார்வை : 66

மேலே