இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

தரணியில் நான் தலை நிமிர்ந்து வாழ்ந்திட
அல்லும் பகலும் தளராமல் நீ உழைத்தாய்
விந்தை உலகினில் விவேகத்துடன் நான் வாழ்ந்திட
அறிவினை விதையாய் நீ விதைத்தாய்
எந்தை மனம் எந்நாளும் நோகாமல் இருக்க
அனுக்ஷனமும் என்னை எண்ணியே உழைத்தாய்
என் கை பிடித்து உலகம் காட்டிய உன்னை
கட்டி தழுவி கூறுகின்றேன்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : ஜோசப் மரியநாதன்.ஜா (20-Jun-15, 10:27 pm)
பார்வை : 1914

மேலே