பாதகியே பாவம் மட்டும் எனக்கா
சுட்டு வெச்ச தங்கம்
உன் காதுல தொங்கயில,
கட்டி வெச்ச என் இதயத்த - நீ
கயிறு கட்டி இழுக்கல..
நிலா வெட்டி வெச்ச நெத்தியில,
பொட்டு வெச்சி போகயில,
என் காதல்ல நெட்டி வெளிய தள்ளல
அத எட்டி நானும் புடிக்கல...
முட்ட கண்ணு முழியில,
நீ உருட்டி உருட்டி பாக்கில,
சுருட்டி கெடந்த ஆசைய - நீ
வெரட்டி வெரட்டி அடிக்கல...
ஒத்த சடை பின்னலுல,
என் உசுர அள்ளி கோர்க்கல,
என் உயிர் கொண்டதுனலத்தான்
உன் கூந்தலுல மல்லி பூத்தது
எனக்கு தெரியல...
வில்லு ஒத்த உன் உதட்டுல,
நீ சொல்ல அள்ளி விசையில,
அம்பு வரும்னு தோனல - அதேசமயம்
அன்பு வரும்னு நினைக்கல..
பாதகியே,
பக்கம் வந்து நிக்கயில
பக்குவமா அத்தனையும்
செஞ்சுட்டு போயிட
கடைசியில
காதல்ல சொன்ன பாவம்
எனக்கா???