நடந்தது நினைவில்லை
நரம்புகளெல்லாம்
மின்னல்கள் முளைத்தவாறு
மீயொலியில் மிரட்டிச் செல்கிறது
வௌவாலொன்று..
வௌவாலின் தலையில் கிடந்த
நெல்லுடைந்து நூறு பூக்கள்
பூத்துச் சிரிக்க அதைக் கண்டு
நொறுங்கியழும் நூறு நிலாக்கள்...
துண்டு நிலவு ஈரமாகுது
ஏனென நோக்கையில்
ஒரு குழந்தை நாவில்
தவழ்கிறது...
அழுவதை நிறுத்தி
கைத்தட்டி சிரிக்க
குழந்தையின் கையில்
ஒரு உலகம்..
ஹ்ஹோ ஐயோ
கண்டது கனவு-கனவில்
நடந்தது நினைவில்லை
என்று நான் சொல்வதற்கு
தூங்கவேண்டுமா?
--கனா காண்பவன்