எனையீன்ற இறையே போற்றி

எனையீன்ற இறையே போற்றி!!

உயிர் கொடுத்தாய்!
அன்பை கொடுத்தாய்!
அறிவை கொடுத்தாய்!
பொருள் கொடுத்தாய்!
புகழ் கொடுத்தாய்!
கலை கொடுத்தாய்!
கல்வியை கொடுத்தாய்!
புன்னியம் கொடுத்தாய்!
வாழ்வை கொடுத்தாய்!
வையகம் கொடுத்தாய்!
என் தாயையே கொடுத்தாய்!!!!!

உனக்கீடு ஏதுமில்லை இவ்வுலகில்!!!

எனுலகம் நீதான் என்பேன்!
உன்மடியே என்னுயிர் என்பேன்!
மதிகொடுத்த கடவுள் என்பேன்!
மானிடனில் முதல்வன் என்பேன்!
நான்கண்ட காதல் என்பேன்!
கண்கண்ட தெய்வம் என்பேன்!

எனையீன்ற இறையே போற்றி!!

பொன் பொருள் தேவையில்லை
உந்தன் பொன் வாக்கே
போதுமென்பேன்!

மண் மணக்க சொத்தே வேண்டாம்
உந்தன் மனம் மணக்கும்
மதியே போதும்!

எனையீன்ற இறையே போற்றி!!

துகிலிலும் துணையாய் நின்றாய்!
துயரிலும் அரணாய் நின்றாய்!
மகிழினில் மறைந்து நின்றாய்!
புகழினில் வித்தாய் நின்றாய்!

எனையீன்ற இறையே போற்றி!!

உன் புகழ் ஓங்கிட
உன் நிழலாய் நான் வாழ்வேன்!
உன் பெயரை காத்திட
என்னுயிரையும் நான் கொடுப்பேன்!

இன்றொருனாள் போதாது
உன் புகழ் போற்றிட
ஈரேழு ஜென்மத்திலும்
நீயே எந்தன் தந்தையாக வேண்டும்
என் உயிர் அப்பாவே.......

எனையீன்ற இறையே போற்றி!! போற்றி!!!

இனிய தந்தையர் தின வாழ்த்துக்களுடன்
காலை வணக்கம்

பிரி்யமுடன்
அசுபா....

எழுதியவர் : அசுபா (21-Jun-15, 1:49 pm)
சேர்த்தது : அசுபா
பார்வை : 84

மேலே