அன்புள்ள அப்பாகளுகாக 555

அப்பா...
இரவினில் ஓடி மறையும் மின்மினி
பூச்சிகளை கைகளில் பிடித்து காட்டி...
இது அணையா
விளக்கு என்பார்...
தோளில் சுமந்து கொண்டு
உலகையும் காட்டுவார்...
தத்தி தவழும் வயதில் ஓடி
வர சொல்லி...
நடை பயிற்சி
கொடுப்பார்...
பள்ளிக்கு செல்லுமுன்னே கைபிடித்து
எழுத கற்று கொடுப்பார் உயிர் எழுத்தை...
விளையாடும் வயதில்
தானும் குழந்தையாக மாறி...
நமக்கு விளையாட்டும்
சொல்லி கொடுப்பார்...
பருவ வயதில் சொல் பேச்சு
கேளாதவன் என்று திட்டினாலும்...
தனிமையில் நினைத்து
வருத்தம் கொள்வார்...
நீ நீட்டிடும் உன்
கைகளுக்குள்...
நீல வானத்தையும் நிலவையும்
கொண்டு வந்து தந்திடுவார்...
தந்தை சொல் மிக்க மந்திரம்
இல்லை பெரியோர்கள் சொன்னது...
உணர்ந்தவர்களுக்கு அது
மந்திரமே சொல்...
உடல்நல குறைவில்
உறங்கும் போது...
இரவினில் கண் விழித்து
நம் மேனியை தொட்டு பார்க்கும்...
அந்த உயிரான
உயிர் பாசம்...
அப்பாவோடு தினம் சில நிமிடங்கள்
பேசினாலே போதும்...
நீ வருடம் படித்து தெரிந்து
கொள்ளும் உலகினை...
அனுபவத்தில் உனக்கு தெளிவாக
சொல்லி விளக்கிடுவார்...
கைபேசியில் நேரத்தை
செலவிடும் நாம்...
இனியாவது அப்பாவோடு சில
நிமிடங்களாவது பேசி மகிழ்வோம்...
அன்புள்ள அப்பா.....
[பாசமிகு தந்தைக்கு சமர்ப்பணம் ].....