தந்தையின் தாய்மை -சந்தோஷ்
தந்தையின் தாய்மை
------------------------
அம்மாவின்
இயல்பான பாசத்திலும்
இயற்கையான அன்பிலும்
அப்பாவின் பரிந்துரையும் கூட
நிச்சயம் இருக்கும்.
"அவனுக்கு ஏதோ பிரச்சினை,
மனசு உடைஞ்சிடுவான்
திட்டாதே... முதல்ல
சாப்பிட்டான்னு கேளு "
அம்மாவிடம் அப்பா
சொன்னதாக சொல்லாமல்
அப்பா அம்மாவிடம்
சொன்னதை சொல்வதில்
அம்மா எப்போதும் வல்லவர்தான்.
அப்பாவிடம் நான் வாங்கிய
பரிந்துரைகளும் ஏராளம்
வசவுகளும் ஏராளம்....
பரிசுகளும் ஏராளம்..
அதிலொன்று என்னை
உணர்ச்சிப்படுத்திவிடும்..
அது... அது
" திறமை இருக்கு. சாதிப்பாய் " என
அப்பா என் மீது வைத்திருக்கும்
நம்பிக்கை.
அப்பா...அப்பாதான்
அந்த இளவயதில்
அப்பாவின் மார்பில்
தலைவைத்து துக்கம்
மறந்து சுகம் கண்ட
அந்த நினைவுகள்
ஏக்கமாக இப்போதும்.............
அப்பா இன்னொரு
அம்மாவாகவும்....!
-இரா.சந்தோஷ் குமார்.