வாழ்க்கையின் முகவரி தேடியே

'வாழ்க்கையின்
முகவரி தேடியே
பறவை ஒன்று
வானில் பறந்ததம்மா'.

'இரவு பகலாக
உறக்கம் தொலைத்து
இரையை சேர்த்ததம்மா.
விட்டில் பூச்சியின்
சிறுவெளிச்சம் தேடியே
இரையை தொலைத்ததம்மா'.

'வானம்விட்டு
பூமிசெல்ல வழியில்லாது
காற்றோடுதன்
உயிரையும் தொலைத்ததம்மா'.

எழுதியவர் : அரிபா (21-Jun-15, 12:58 pm)
பார்வை : 99

மேலே