என் ரகசிய செல்லமே...

விக்கித்து நின்ற வாழ்வில்
வீணையின் நரம்பாய் - என்னுள்
ஸ்வரங்களை மீட்டியவன்
நீ....

உன் சினேகத்தை
சிற்பத்தின் உயிராய் - என்னுள்
உயிர்ப்பித்த ஓவியன்
நீ...

நினைவலைகளின் கண்ணீரை
உள்வாங்கிய தலையணையாய் - என்னுள்
தாக்கத்தை ஏற்படுத்தியவன்
நீ...

நெஞ்சுக்குள் அடைக்கும்
துக்கங்களை துடைத்து - என்னுள்
துணிவைத்தந்த தூயவன்
நீ...

ஏக்கத்தின் தவிப்பில்
ஏழிசையாய் இசைத்து - என்னுள்
ஏகாந்தத்தை ஏற்படுத்தியவன்
நீ...

என் ரகசிய செல்லமே...
எனக்கும் உனக்கும்
உள்ள உறவின் நிலைமை
எதிரெதிர் துருவம் கொண்ட
காந்தத்தின் தன்மை
அதுவே என்றும் உண்மை...

ப்ரியமுடன்...
பிரேமலதா

எழுதியவர் : Premi (12-May-11, 6:52 pm)
சேர்த்தது : Premi
பார்வை : 420

மேலே