வேதியலின் விந்தைகள் - போட்டிக் கவிதை
எதிலும் கரையாத
தங்கத்தையே
கரைத்திடுமாம்
"ராஜதிராவகம் "
மூன்று பங்கு அடர்
ஹைட்ரோ குளோரிக் அமிலமும்
ஒரு பங்கு அடர்
நைட்ரிக் அமிலமும்
கலந்த கலவையாம் இது !
ஆனால் ....
பொன்மணியே !
என் கண்மணியே !
உன் மனதைக் கரைக்க
காதலில் குழைக்க
என்ன செய்ய ....??