சிகர கலைகளின் புருவமாய் - தேன்மொழியன்

சிகர கலைகளின் புருவமாய்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குற்றமில்லா கொலைகளில்
வேஷமிட்ட நிழல்களும்
தனையிழந்த சுழற்சியோடு
தரைகளைக் கிழித்து
கீதை வாசகம் எழுதட்டும் .
சுற்றமில்லா நிலைகளில்
பதியமிட்ட புடவைகளும்
வாசமிழந்த பூக்களாகி
வாழ்வினை வதைத்து
பாரதி வரிகளை வாசிக்கட்டும் ...
சுவாசமில்லா நேசத்தில்
முத்தமிட்ட கன்னங்கள்
சிநேகமிழந்த மனமாகி
சிற்றின்பம் குடித்து
சிகர கலைகளை கற்கட்டும் ...
ஏற்றமில்லா தாகத்தில்
எல்லைதாண்டிய ஆக்கங்கள்
புரிதலில்லா தேடலாகி
உடல்களை எரித்து
மனிதப் பிழைகளை பதிக்கட்டும் ...
- தேன்மொழியன்