இன்ப இம்சை அழகி -சந்தோஷ்
![](https://eluthu.com/images/loading.gif)
விடியல்
ஒளி விரல்களால்
காலை மணி ஆறில்
எனை எழுப்பத் தூண்டியவள்..
மதியம் பண்ணிரெண்டில்
தன் அக்னி இதழ் கீற்று களினால்
என் மேனியை
முத்து வியர்வையில்
குளிப்பாட்டினாள்.
இப்படியான இன்ப இம்சை
அழகியை காதல் கொஞ்ச
கவிதைத் தூரிகையால்
சீண்டலோவியமிட
கடற்கரைக்கு விரைந்தேன்
மாலைவேளையான
மணி ஆறில்..!
பாருங்களேன்…!
இவளுக்கு என்ன திமிரு…!
என் மன்மத சொல்வித்தைக்கு
கிறங்கிவிடக்கூடாது என்பதற்காகவே…
ஆழி மெத்தையில்
வெள்ளைச் சரிகையுள்ள
மஞ்சள்பட்டுப் போர்வைக்குள்
வெட்கச்சிவப்போடு
ஓடி ஒளிந்துக்கொள்ள
விரைகிறாள்
இந்த கள்ளி
என் சூரியத்தேவதை…!
–
-இரா.சந்தோஷ் குமார்.
------------------------------------------------------
** படம் :திரு ஆதித்யா நாகராஜ்
நன்றி : வல்லமை மின் இதழ்