எனக்கு இன்னும் தெரியவில்லை
ஆமாம்
எனக்கு இன்னும் தெரியவில்லை..
புத்தம் புதிதாய் சொற்கள் பறித்து
லாகவமாய் வரிகள் வளைத்து
கவிதைப் பின்ன
எனக்கு இன்னும் தெரியவில்லை..
ஆனாலும்
ஏன்தான் முட்டிக் கொள்கிறார்கள்
இந்த கவிஞர்களெல்லாம் என்னோடு?
கலந்து கொள்ளும் போட்டிகளிலெல்லாம்
கடத்தி வருகிறேனாம் முதல் பரிசை
ஆமாம்
எனக்கு இன்னும் தெரியவில்லை
லாகவமாய் கவிதைப் பின்ன
கவிதையென்றால் எழுதி விடுவேன்
"அவளின் பெயரை"