அறுவடை

முன் ஏறு சரியாக இருந்தால்
பின் ஏறு சரியாக இருக்கும்!
மூத்தவரைப் பார்த்தே
இளையவர் கற்கின்றனர்!
நல்லவற்றை விதைத்தால்
நல்லவற்றை அறுவடை செய்யலாம்.
வினையை விதைத்துவிட்டு
தினைக்கு ஏங்கித் திரியாமல்
நன்மை செய்தே நன்மையடைய முடியும்!
அன்பைக் கொடுத்தே அன்பைப் பெற முடியும்!
வாழ்ந்து காட்டுங்கள் மூத்தவர்கள்
கற்று கொள்வார்கள் இளையவர்கள்!
வாழ்க்கைப் பாடம் முடிவதேயில்லை
வாழும் வரை வாழும்
கற்றுக் கொ்ள்ள நிறைய உண்டு
வாழ்ந்து காட்டுகையில்
வாழும் புராணமாகலாம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (23-Jun-15, 8:40 pm)
Tanglish : aruvatai
பார்வை : 75

மேலே