காற்றுக்கு வியர்க்கிறது

சன்னலுக்கு
வியர்க்கிறது
மூடிவிடுங்கள்..

விசிறிக்கு
வியர்க்கிறது
நிறுத்திவிடுங்கள்..

நிலைக்கதவிற்கு
வியர்க்கிறது
திறந்துவிடுங்கள்..

உங்களை தேடித் தேடியே
காற்றுக்கு வியர்க்கிறது
சீக்கிரம் வெளியே
வாருங்கள்..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (23-Jun-15, 11:04 pm)
பார்வை : 112

மேலே