உயிர் எழுத்து பூ மாலை

அ ல்லிப்பூ அதன் விரிந்த அழகை கண்டு
ஆ வாரம் பூக்கள் மொத்தமாய் பூக்க
இ ன்பமாய் தாமரை இதழை விரிக்க
ஈ டுஇல்லா மல்லிகை தன் மனத்தை வீச
உ ருண்டையான பருத்தி தன் மென்மையான உருவத்தை காட்ட
ஊ டுருவி நிற்கும் ரோஜா தன் சிவந்த நிறத்தில் ஜொலிக்க
எ ருகலம் பூ தன் இனத்தை ஊர் எங்கும் பரப்ப
ஏ ற்றமிகு முல்லை கமல
ஐ யமின்றி தாழம்பூ தன் மனத்தால் சிதற
ஒ ரு பனிரெண்டு ஆண்டு கழித்து பூக்கும் குறிஞ்சி மலரும்
ஓ ர் இனத்தை சேர்ந்த ஜாதி மல்லியும்
ஒள வாறே ஒன்று சேரும் கதம்பத்தில் !!!

எழுதியவர் : கவி ராஜா (24-Jun-15, 5:49 am)
பார்வை : 499

மேலே