வரலாற்றுப் பிழை

முகத்திலிருந்து உதிர்ந்தவனுக்கு
உடல் வளர்ந்திட்ட
நிகழ்வுகளைப் போலல்லாது.....

கைகளிலிருந்து பிறந்தவனுக்கோ
முதுகு பிட்டம்
முளைத்த அபூர்வங்களைப்
போலல்லாது ...

தொடையிலிருந்து தவழ்ந்தவனின்
தலை ஓங்கி
உயர்ந்த மாற்றங்களைப்
போலல்லாது...

கால்களிலிருந்து உருண்டவனின்
இன்னபிற பல்கிய
பரிணாமங்களைப்
போலல்லாது...

இந்தக் கிறுக்கல்களையும்
கவிதையெனச் சொல்லும்
வரலாறுப் பிழை நிகழ்வுகள்
அப்படியே
கடந்து போய் விடட்டும்.......

எழுதியவர் : கட்டாரி (சரவணா ) (24-Jun-15, 6:47 am)
பார்வை : 626

மேலே