காலைச் சாரல் 05 - காலம் மாறுது

அதிகாலை தோன்றும் எண்ணங்கள்....
24-06-2015
காலம் மாறிக் கொண்டிருக்கிறது....!

"எட்டி எடு ஏழு பைசா ... நான் தொட்டுத் தந்தால் பத்துப் பைசா..." (எலந்தப் பயம்)
ஏழு பைசா மதிப்பிழந்து வருடங்கள் பல.... எலந்தப் பழம்.....? வேணாம் அழுதுடுவேன்....

"எட்டணா இருந்தால் எட்டூரு என் பேச்சைக் கேட்கும்"
எதுகைக்கு OK... குடுத்தா பிச்சக்காரர் கூட வாங்க மாட்டார்...

"குண்டு மல்லி ரெண்டு ரூபாய் ..உன் கூந்தல் ஏறி உதிரும் பூ ....."
மல்லி பல மடங்கு விலை ஏறி விட்டது..!

"பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் ... நீ பாதி தின்று தந்ததாலே...."
என்ன விலையானாலும் பரவாயில்லை பேரன் கேட்டான் என்று சில வருடங்கள் முன் ஊரெல்லாம் சுற்றியும் கிடைக்க வில்லை.... சமீபத்தில் உறவினர் திருமண வரவேற்பில் பார்த்தேன்... பேரன் பேத்தி இருவரும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ... ஆசை தீரும் வரை....

அப்பறம் இதைப் பாருங்க....
"எண்ணிரண்டு பதினாறு வயது... அவள்
கண்ணிரண்டும் ஆடுதம்மா காதல் கொண்ட மனசு"

"அவளொரு அழகிய பூஞ்சிட்டு வயது
ஈரொம்போது பதினெட்டு"

இப்ப பாட்டுல என்ன வயது வரம்பு என்று தெரியவில்லை (எதாவது வார்த்தைகள் புரிந்தால் தானே)....
ஆனால் நிஜத்தில் 25 தாண்டுகிறது....

ஒன்று மட்டும் புரிகிறது..... எல்லாம் முன்பு இருந்ததைவிட அதிகம்....
***
நேற்று கழுத்து வலி என்று மருத்துவரிடம் சென்றிருந்தேன். ஐந்து நாட்களுக்கு மாத்திரைகள் மட்டும் அறு நூறு ரூபாய்க்குத் தந்தார்... இத்தனைக்கும் வலிக்கு மாத்திரை வேண்டாம் என்ற பிறகு.... இன்னும் ஏழு நாட்களுக்கு பிசியோ வேறு... 200 x 7. எனோ தெரியவில்லை எக்ஸ்ரே, ஸ்கான் எல்லாம் எடுக்கச் சொல்ல வில்லை (எங்க போறான் திரும்ப நம்மகிட்டதான் வருவான் வலியென்று என்ற நம்பிக்கையாகக் கூட இருக்கலாம்...!)

இரண்டு ரூபாய்க்கு மருத்துவரிடம் சென்று சிகப்பு நிற திரவத்தை பாட்டிலில் வாங்கி வந்த காலம் நினைவில் வந்து போனது....
****
தினம் பள்ளியில் இருந்து வரும் பொழுது ஏதாவது வாங்கவில்லை என்றால் தாத்ததாவின் ரேடிங் டௌன்.
தின்பதற்கு வாங்கியபின் பொம்மைக் கடைக்குள் நுழைந்து பொம்மை வாங்குகிறேன் என அறிவிக்கிறாள்...
நான் உரக்க "தாத்தா don't have money..." என்றேன்
அவள் திரும்ப அதே உரத்த குரலில்: "I know you have money...you have thousands of rupees.." வயது - 6.

ஆயிரங்கள்......?????!!!!!!!!
-------- முரளி

எழுதியவர் : முரளி (24-Jun-15, 6:34 am)
பார்வை : 241

சிறந்த கட்டுரைகள்

மேலே