என் உயிரே நீ எங்கே-முஹம்மத் ஸர்பான்
என் விரலை கவி எழுத தூண்டிய குருவே!!
உன் எழுத்துக்கள் தான் என் மதியின் கருவே!!
மலருக்கு வாசம் கொடுத்தவனே!!
பலரின் மனதில் உயிரோடு வாழ்பவனே!!
எதுகை,மோனை உன் விரலில் காதல்
உவமையும் உருவகமும் உன்னோடு மோதல்.
தமிழ் கருவில் பிறந்த மன்னவனே!!
என்றும் மனதில் வாழும் என்னவனே!!
நீ புன்னகைத்தால் நிலவும் தாரகையும் வானமாக கவி பேசும்
நடக்கையில் தென்றலும் உன்னை இசையாய் வருடிச்செல்லும்
உன் கவி கேட்க மனதுக்கு தாகம்
நீ வாசித்த காணொளி மேல் மோகம்
தமிழ் அன்னையை காத்தாய் எத்தனை யுகம்
உன்னை போல் யார் இருக்கான் தமிழை காக்க.
இன்று நீ என்னோடு இல்லை
என்றும் நான் உன்னோடுதான் வாலியே!!!

