ரப்பர் தோட்டத்திலே

ரப்பர் தோட்ட தொழிலாளி ஒருவன் முதன்முதலில் காதலிக்கிறான்.அந்தப் பாமரத் தமிழன் படும்பாட்டைப் பாடினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை...


ரப்பர் தோட்ட வாழ்க்கையிலே
ரத்தம் சுண்ட உழைக்கிறேன்
அப்பன் ஆத்தா விட்டுப்போன
அடியத் தொட்டு நடக்கிறேன்
இப்ப வந்த காதலாலே
ஏதோ கொஞ்சம் சிரிக்கிறேன்
தப்பா சரியா தெரியவில்லே
தனக்குத் தானே பேசுறேன்...


காதல் காத்து வீசும்போது
கதவை சாத்த மனமில்லே
வாழ்தல் சாதல் இரண்டின்நடுவே
வதைக்கும் ஆனால் ரணமில்லே
போதை தந்து மயக்கினாலும்
புத்தி தெளிய விரும்பலே
ஆதம் ஏவாள் ஆரம்பித்த
ஆட்டம் இன்னும் முடியலே...


கூலி வாழ்க்கை மாறும்போது
ஜாலி பண்ணும் கனவுல
வேலி தாண்டி ஆடும்மனச
கட்டிப் போட முடியலே
வாலிப் பாலை காணுறப்போ
வருது கொஞ்சம் நம்பிக்க
நாளு போக சின்னத்துளியும்
நிறஞ்சி நிக்கும் பாத்துக்க...


-பாதி தூக்கத்தில் எழுந்து பாடியது ...

அ.மு.நௌபள் கவிதைகள்...

எழுதியவர் : அ.மு.நௌபள் (25-Jun-15, 2:23 am)
பார்வை : 106

மேலே