அடுக்கு மாடி Flat வாழ்க்கை

ஒற்றைக்கல்லும் உரிமையாய்
ஒட்டிவிடமுடியாத சொந்த வீடு !!

ஓடிவிளையாடு பாப்பா என்று
பாடிவிடமுடியாத பகட்டு வீடு !

படிக்கட்டு ஏற இறங்க முடியாத
முட்டி தேய்ந்த மூதாட்டிக்கு !

எதிர் வீட்டு தம்பி ஏகாம்பரத்தையும்
பக்கத்துக்கு வீட்டு பாட்டி பங்கஜத்தையும்
குசலம் விசாரிக்க முடியாமல்
ஜாடையாக பேசவும் ! உலகத்தை
எட்டி பார்க்கவும் பால்கனிதான் நிலாமுற்றம் !

ஐயோ திருடன் அலறினாள் பாட்டி!
கம்பிக்கதவுக்குள் பாட்டி
கம்பி எண்ண வேண்டிய
கள்ளன் வெளியே !

முதல் வகுப்பு கவுரவ சிறைக்கு
முண்டியடிக்கும் சுதந்திர கைதிகள் !

கோடிகளாலும் வாங்க முடியாத
இயற்கைச்சூழலை இழந்து நிற்கும்
அப்பாவி பணக்காரர்கள்!

ஏ கிராமமே! உன் பச்சை சட்டையை
கழற்றி பட்டணத்து சட்டை போடாதே ! இங்கே
ஆக்சிஜனையும் அடைத்த குப்பியில்
விற்கும் சூழ்நிலை வரும் !

இக்கரைக்கு அக்கறைதான் பச்சை !!

எழுதியவர் : கவிஞர் தமிழாணவ அலெக்சாண் (25-Jun-15, 9:20 pm)
பார்வை : 97

மேலே