நூற்கோர்த்த இரவுகள் - சேலைக்கிறுக்கன் அவளுக்கு மட்டும்

நூற்கோர்த்த இரவுகள் - (சேலைக்கிறுக்கன் அவளுக்கு மட்டும்)
==========================================================

காகிதங்களோடு சண்டையிட்டு
தொலைத்த இரவுகளை,
நூல் கோர்த்து
தொலையாத இரவுகள் செய்தாய்

புளங்காகிதம் உடைய
துளைகளிட்டுவிட்டு
காரணம் ச்சொல்லி
அகன்று நின்றாய்
யாருக்கான காத்திருப்புகளுக்கோ
"மாதிரி" செய்தாய்

நிலப்பிரபுத்துவத்தின்
ஆளுமைப்படுகை வரிசையில்
எத்தனையாவது கல்லறை
எனக்கானது என்று
உனக்குத் தெரிந்திருக்கும்

சிரிப்புக்குள்
மலர்த்தோட்டம்
"வளர்க்கிறாய் சூட்சமங்களை""
சொல்லவில்லை,
மனவெட்டி
எச்சில் அடையாளங்கள்
ஏதுமின்றி கொன்றுவிட்டப்பின்னால்,
மேலிட்டு அடைக்கும்
பதம் செய்த
திண்பாறை கருங்கல் பேழைக்குள்
கால்கள் மடக்கி
சுருண்டு கிடக்கப் போகும்
சவத்திற்கு
வண்ணங்களும் வாசங்களும் புரியப் போவதில்லை,
பிணப்பாடைக்குக்
கீழே
தூவி அழகுப்பாத்துவிட
நிழற்காணும் க்ரூரங்களுடன்
ஏதேனும் ஒரு பூவை
வளர்த்திருப்பாய்தானே

அடைப்படாதக் குரலின்
அதோரோகம்
அடுத்தக் கட்டங்களுக்கு தாவிச் செல்லக்கூடும்,
அவைகளை
என்போல் உன்னால்
அழிக்க நேரிடுமா தெரியவில்லை

அருவமாகிவிட்டேன்,
காது குடைவது ஓய்ந்தபாடில்லை
மனக்கிணறு விளிம்பின் பிரதிபலிப்பில்,
குறைசொல்லிக் கொண்டிருக்கும்
அந்த முகந்தெரியாத
யார் யாரோவின் இரைச்சல்கள்

மன்றாட்டுகள் தோற்காதவரை
காத்திருப்பேன்
தோல்வியுறுந்தருணம்
வ(ழிலி)யின்றி
உனைக் கொன்றுவிடுவேன்

பழிவாங்கத் துடிக்கும்
ஆவிகளினோடும்
பாவங்களின் பிராயச்சித்தங்களினோடும்
தீராத கடப்பாடுகள் இருக்கிறன


அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (26-Jun-15, 3:40 am)
பார்வை : 86

மேலே