மின்னணுவில் மிதப்பவளோ - தேன்மொழியன்
![](https://eluthu.com/images/loading.gif)
மின்னணுவில் மிதப்பவளோ ..?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கண்சிமிட்டிய கணினியை
உள்ளங்கையால் நீ உரச
மின்னணுவின் தேகமும்
மிரண்டுப் போனதை உணர்ந்தாயா ..?
கைபேசியின் காதோடு ..உன்
செவி மடலை நீ சாய்க்க ..
அலைவரிசையின் ஆணவமும்
அடங்கி கிடப்பதை அறிந்தாயா ..?
தொலைக்கோளின் தேகத்தில்
உந்தன் கைரேகையும் கவியாக ...
திரைக்குள் திரண்ட ஒளியெல்லாம்
ஒளிந்து ரசிப்பதை பார்த்தாயா ..?
சுழலும் விசிறியின் விரல்கள்
ஓயாமல் ஓய்வெடுத்து நிற்பது ..
ஓர் தலை கலைந்த ஓவியத்தின் எழிலழகை...எங்கும் எழுதவாம் ..
- தேன்மொழியன்