நான் நானாகவே

நான் நானாகவே இருந்து விட்டு போகிறேன்

பணம் பதவி
பாசம் பந்தம்
நட்பு நேசம்
உறவுகளுடன்
தொடர்பு கொண்டு
ஆசை தீர்த்து
அசிங்கப்பட்டு
தூய்மை கொன்று
துக்கம் வளர்த்தேன்

சூழ்ந்துள்ள அத்தனையும்
சுகம் தருமென்று
சுய நினைவற்று
பகல் கனவு
பல கண்டேன்

உடல் மீதும்
உறவுகள் மீதும்
பொருட்கள் மீதும்
பற்று வைத்தேன்

பற்றற்றவனை
பற்றாமல் விட்டுவிட்டேன்

விதி விளையாடியது
கர்மததின் பலன்
கதவை தட்டியது

உருவம் மாறியது
உறவுகள் மாறின
காலம் மாறியது
கனவுகள் தொலைந்தன
அசிங்கங்கள்
அலையாய் வந்தன

சாக்கடை சந்துகள்
என் இருப்பிடமாயின

சமூகம் சிரித்தது
மரியாதை மறித்தது
வயிறு எரிந்தது
வேதனை விரிந்தது

ஓடிக் களைத்து
ஒதுங்கி நின்றேன்
சற்று தூரத்தில்
சாத்தான் நின்றென்னை
வாவென்று அழைத்தது

வேறு இன்பம் தந்து
உன்னை வேறாக
மாற்றுவேன் என்றது.

மீண்டும் ஆரம்பித்த இடத்திலிருந்ததா?

வேறு திசை நோக்கி
தலை திருப்பினேன்
கடவுள் என்னைப் பார்த்து
மெதுவாக சிரித்தார்.

நான் சாத்தானுக்கு
பதிலுரைத்தேன்

நான் நானாகவே
இருந்துவிட்டு போகிறேன்.

எழுதியவர் : இ ஆ சதீஸ்குமார் (26-Jun-15, 11:32 am)
Tanglish : naan naanagave
பார்வை : 139

மேலே